பேஷன் உடைகள் எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்களுக்கு உள்ளாகும்?

பேஷன் உடை பிரியர்கள் ரெடிமேட் ஆடைகளை வாங்குவதைவிட தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து ஆடைகளை அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

2கே யுவதிகள் பலர் இன்றைய வொண்டர் உமன் உள்ளிட்ட திரைப்பட சூப்பர் ஹீரோயின்கள் அணியும் ஆடைகளை போன்று அணியவே ஆர்வம் காட்டுகின்றனர்.

இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்து பேஷன் உடைகளில் என்னென்ன விதமான மாற்றங்கள் உண்டாகும் எனப் பார்ப்போமா?

டஸ்ட் புரூஃப் (தூசு படியாத உடை), ஃபயர் புரூஃப் (வெப்பம், நெருப்பால் பாதிக்கப்படாத உடை), வாட்டர் புரூப்ஃ (மழையால் பாதிக்கப்படாத உடை) ஆக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஒரு காலத்தில் டோர்ன் ஜீன்ஸ் எனப்படும் கிழிந்து நைந்த ஜீன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டபோது பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால் இப்போதோ அதுதான் டிரெண்ட்.

அதேபோல எதிர்காலத்தில் சூப்பர் ஹீரோ காஸ்டியூம்கள் அணிந்து பலர் சாலையில் உலா வருவர்.

ஆன்லைன் புகைப்படங்களுக்கு பிரத்யேக உடை அணிவிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. எதிர்காலத்தில் டிஜிட்டல் உடைகள் அதிக கவனம் பெறும்.