தமிழ் புத்தாண்டு பலன் 2024 -2025

மேஷம்... முயற்சிகள் அனைத்திலும் லாபம் கிடைக்கும். முன்னேற்றம் தரும் ஆண்டாக அமையும். இதுவரை இருந்த நெருக்கடி மறையும். பரிகாரம்: விநாயகர், முருகன், சனீஸ்வரர் வழிபாட்டால் வாழ்க்கை வளமாகும்.

ரிஷபம்... வேலைவாய்ப்பு, பணியில் முன்னேற்றம் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். பரிகாரம்: முருகன், குருபகவான் மற்றும் நடராஜர் வழிபாட்டால் நன்மை உண்டாகும்.

மிதுனம்... பொருளாதாரம் உயரும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பரிகாரம்: நடராஜர், சனீஸ்வரரை வணங்கலாம். பிரதோஷத்தன்று சிவனை தரிசிக்க நல்வாழ்வு அமையும்.

கடகம்... முயற்சிக்கேற்ப வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிவன், சனீஸ்வரர், லட்சுமி நரசிம்மர் வழிபாடு சிறந்தது.

சிம்மம்... வேண்டாத நண்பர்களால் சங்கடம் உருவாகும். உழைப்பு அதிகரிக்கும்; தனித்தன்மை வெளிப்படும். பரிகாரம்: துர்க்கை, மகாலட்சுமி, விநாயகரை வழிபட நன்மை அதிகரிக்கும்.

கன்னி... எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். செல்வாக்கு உயரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பரிகாரம்: விநாயகர், பெருமாள், மீனாட்சியம்மன் வழிபாடால் நன்மை அதிகரிக்கும்.

துலாம்... செயலில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பரிகாரம்: அம்மன், குருபகவாணை வணங்க வாழ்வு வளமாகும்.

விருச்சிகம்... முயற்சியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகி ஒற்றுமை ஏற்படும். பரிகாரம்: குருபகவான், சனீஸ்வரர், முருகனை வழிபட முன்னேற்றம் கிடைக்கும்.

தனுசு... முயற்சிகள் யாவும் வெற்றியாகும். துணிச்சல், தைரியம் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. பரிகாரம்: சிவபெருமான், மகாலட்சுமி, காளிகாம்பாள் வழிபாடு சிறந்தது.

மகரம்... வேலை வாய்ப்பு, திருமண வாய்ப்பு அமையும். தொழில், பணி மற்றும் புதிய முயற்சிகளில் கவனமாக செயல்பட வேண்டும். பரிகாரம்: காளிகாம்பாள், சிவன் மற்றும் அனுமன் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

கும்பம்... தொழிலில் லாபம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வீண் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் நிதானமாக செயல்படவும். பரிகாரம்: அனுமன், நந்தி பகவான், குலதெய்வ வழிபாட்டால் நன்மை அதிகரிக்கும்.

மீனம்... மேற்படிப்பு, வேலைக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. முயற்சிகள் வெற்றியாகும். நெருக்கடி தீரும். பரிகாரம்: பிரத்தியங்கிரா, குலதெய்வம் மற்றும் திருவெண்காடு புதனை தரிசிக்க நன்மை கிடைக்கும்.