இந்தியாவில் ரிவர் ராஃப்டிங்கிற்கான சிறந்த இடங்கள் சில !
ரிஷிகேஷ், உத்தரகாண்ட்... கங்கை நதி, இமயமலையில் இருந்து இறங்குவதால், ஷிவ்புரியிலிருந்து ரிஷிகேஷ் வரையிலான 16 கி.மீ., தூரம் ராஃப்டர்களுக்கு சிலிர்ப்பான அனுபவத்தை அளிக்கிறது.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சியாங் நதி என்ற பிரம்மபுத்திரா ஆற்றின் வழியாக தொலைதூர வனப்பகுதிகள், கரடுமுரடான பள்ளத்தாக்குகள் மற்றும் பழங்குடியின கிராமங்களை ஆராயலாம்.
சிக்கிமில் உள்ள இமயமலையில் இருந்து உருவாகும் டீஸ்டா நதி, மூச்சடைக்கக்கூடிய நிலப்பரப்புகளுக்கு இடையே ஆரம்ப, அனுபவம் வாய்ந்த ராஃப்டர்களுக்கு பரவசமான ராஃப்டிங் அனுபவத்தை அளிக்கிறது.
பியாஸ் நதி, ஹிமாச்சல பிரதேசம்... அழகிய குலு பள்ளத்தாக்கு வழியாக பாயும் பியாஸ் நதியில் பிரமிக்க வைக்கும் இமயமலையின் பின்னணியில் ராஃப்டிங் செய்வது சாகசபிரியர்களுக்கு உற்சாகமானதாகும்.
கர்நாடகாவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளில் அமைந்திருக்கும் காளி நதி, பசுமை மற்றும் அருவிகளுக்கு நடுவே ஒரு அற்புதமான ராஃப்டிங் அனுபவத்தை தருகிறது.
உயரமான சாகசத்திற்கு லடாக்கிற்குச் சென்று, ஜான்ஸ்கர் நதியின் பனிக்கட்டி நீரில் முயற்சிக்கலாம். இது மிகவும் சவாலான ராஃப்டிங் அனுபவத்தை அளிக்கக்கூடும்.
கர்நாடகாவின் பசுமையான கூர்க்கில் அமைந்துள்ள பாராபோல் நதி, சவாலான, சிலிர்ப்பை விரும்புவோருக்கு ஏற்றதாக உள்ளது. அடர்ந்த காடுகள், பாறைகள் என விரிகிறது இந்த ராஃப்டிங்.