அயோத்தி ராமர் கோவில் கட்டடக் கலை சிறப்புகள்... !
அயோத்தி ராமர் ஜென்ம பூமியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கும்பாபிஷேகத்துடன் வரும் 22-ல் திறக்கப்பட உள்ளது.
ராமர் கோயிலில் ஸ்ரீராம குண்டம், அனுமன் மண்டபம், மகரிஷி வால்மீகி ஆராய்ச்சி மையம் என, மொத்தமாக 70 ஏக்கர் பரபரப்பளவில் அமைந்துள்ளது.
இதில் 2.7 ஏக்கரில் 57,400 சதுரடியில் 161 அடி உயரத்தில் கோயில்அமைந்துள்ளது. இங்கு 6 சன்னதிகள் உள்ளன.
இதில் மூலவர் சன்னதியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட உள்ளது.
சிலைபீடத்தை சுற்றி ராஜஸ்தான் மார்பிள்களால் கருவறை கட்டப்பட்டு பணிகள் முழுமையாக முடிந்துள்ளது.
கோயில் கட்டுமான பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மிகவும் பக்தியுடன் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்டர்லாக் சிஸ்டத்தின் மூலம் கோயி்லில் கட்டுமான பணிகள் நடந்துள்ளது.
மேலும் ராஜஸ்தான் ஜெயப்பூரின் பன்சி பகர்பூர் பிங்க்ஸ்டோன் மார்பிளால் கட்டப்பட்டுள்ள தூண்களில் செதுக்கப்பட்டுள்ள கலை நுணுக்கத்துடன் கூடிய தெய்வங்களின் சிலைகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.