தென் மாநிலங்களில் பிரமிக்க வைக்கும் கோவில்கள் சில !
கர்நாடகா, ஹம்பியில் உள்ள விருபாக்ஷா கோவிலுக்கு அறிமுகமே தேவையில்லை. இது ஹம்பியின் இடிபாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது; கிராமத்தின் பொற்கால வரலாறை உணரலாம்.
கட்டடக்கலை மட்டுமின்றி ராஜராஜசோழனின் தமிழ்பற்றுக்கும் உதாரணமாக, கம்பீரமாக வீற்றிருக்கிறது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும்.
முருதேஸ்வரர் கோவில், கர்நாடகா... சிவபெருமானின் உயரமான சிலைக்கு பெயர் பெற்றது இக்கோவில். அரபிக்கடலின் அழகிய காட்சிகளையும் இங்கு கண்டு ரசிக்கலாம்.
வண்ணமயமான சிற்பங்கள், உயரமான கோபுரங்கள், மண்டபம் மற்றும் தூண்கள் என பிரமிக்க வைக்கிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற மகாபலிபுரம் கடற்கரை கோவில், பார்ப்பவர்களை வெகுவாக பிரமிப்பில் ஆழ்த்துகிறது. நூற்றாண்டுகளை கடந்தும் சிற்பக்கலையின் அழகு வியக்க வைக்கிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் அதன் நுணுக்கமான கல் சிற்பங்கள் மற்றும் பிரமாண்டமான கோபுரத்தால் பிரமிக்க வைக்கிறது.
ராமாயண காவியத்துடன் தொடர்புடைய வரலாற்றுக்கு பெயர் போனது ராமேஸ்வரம் தீவிலுள்ள ராமநாதசுவாமி கோவில்.
தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம்... இந்த அழகிய கோவில், பிரபஞ்ச நடனக் கலைஞரான நடராஜ வடிவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணர் கோவில், குருவாயூர்... கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோவிலின் கட்டடக்கலை எளிமையாக இருந்தாலும், வெகுவாக ஈர்க்கிறது.
காஞ்சிபுரம், கைலாசநாதர் கோவில் அதன் ஒற்றைக்கல் கட்டடக்கலை மற்றும் மணற்கல் செதுக்கலுக்கு புகழ் பெற்றது. பல்லவர் கால கலையின் தலைசிறந்த படைப்பாக இக்கோவிலை கூறுவர்.