சில்லென்ற குளிர்கால பயணத்தில் கவனிக்க சில டிப்ஸ் !
குளிர்காலத்தில் பயணிக்கும் முன்பாக நீங்க செல்லக்கூடிய இடத்தின் வானிலை குறித்து தெரிந்து கொள்வது அவசியம். பனிப்பொழிவு, வெப்பநிலை ஏற்ற, இறக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
குளிர்ச்சியான இடத்துக்கேற்ப கதகதப்பான உடைகளை எடுத்துச் செல்லும் போது மழை, பனியிலிருந்து உங்களை பாதுகாக்கும் வகையில் நீர் மற்றும் காற்று புகாத உடைகளை தேர்ந்தெடுக்கவும்.
வாட்டர் ப்ரூவ் ஷூக்கள், ஹேண்ட் கிளவுஸ், கேப் மற்றும் ஷால் ஆகியவற்றையும் மறக்க வேண்டாம். பாதங்களை சூடாக வைத்திருக்கும் வகையில் உள்ள ஷூ சாக்ஸ்கள் அவசியம்.
குளிர் காலத்தில் பலரும் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பர். ஆனால், உடலை நீரேற்றமாக வைக்க தேவையான அளவு தண்னீர் கட்டாயமாக குடிக்க வேண்டும்.
குளிர்காலத்தில் மாலை நேரத்தில் விரைவாக இருள் சூழத் துவங்கும் என்பதால், அதற்கேற்ப திட்டமிடுங்கள்.
குளிர் வெப்பநிலையானது மின்னணு சாதன பேட்டரிகளை வழக்கத்தை விட வேகமாக வெளியேற்றும். எனவே, வெளியே செல்லும் முன் போன், கேமரா போன்றவற்றில் சார்ஜ் முழுமையாக உள்ளதா என சரிபார்க்கவும்.
குளிர்கால வானிலை போக்குவரத்து தாமதத்திற்கு வழிவகுக்கும் என்பதால், பயணத்தின் போது கூடுதல் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளவும்.
நீங்கள் செல்லும் இடத்துக்கேற்ப உள்ளூர் நடைமுறைகளை மதிப்பது மிகவும் முக்கியமானது.