இன்று தேசிய போலீஸ் நினைவு தினம்!
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்., 21 ஆம் தேதி தேசிய காவலர் நினைவு தினம் கொண்டாடப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, மீட்பு பணி உட்பட பல்வேறு பணிகளில் போலீசார் ஈடுபடுகின்றனர்.
போலீசாரின் உயிர் தியாகத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அக். 21ல் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
குறிப்பாக 1959 அக்.21ல் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 10 போலீசாரை சீன ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.
இவர்களின் தியாகத்தை அங்கீகரிக்கும் விதமாக 2018ல் இத்தினம் உருவாக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட தேசிய போலீஸ் நினைவகம், அருங்காட்சியகம் டில்லியில் 2018ல் திறக்கப்பட்டது.
முக்கிய நிகழ்வாக ஆண்டுதோறும் இந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் விழா நடைபெறும் .