இன்று உலக தாய்மொழி தினம்!
நம் தாயிடமிருந்து கற்கும் முதல் மொழி, நமக்குத் தாயாய் அமைந்து பின் வாழக்கையில் உலகியலைக் கற்க உதவுவது நம் தாய்மொழி ஆகும்.
ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இணைப்பு பாலமாக விளங்குவது மொழி. இது சமூக ஒருங்கிணைப்பு, வளர்ச்சிக்கு முக்கியம். ஒவ்வொரு பகுதி மக்களுக்கும், ஒரு தாய்மொழி இருக்கும்.
இவற்றின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கிலும், அவற்றுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கிலும் பிப்., 21ல் சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது
வங்கதேசத்தில் 1952ல் உருதுக்குப் பதிலாக வங்க மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என போராடி உயிரிழந்த தாகா பல்கலை மாணவர்கள் நினைவாக 'யுனஸ்கோ' 1999ல் இத்தினத்தை உருவாக்கியது.
உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை.
இந்தியா பல மொழிகள் பேசும் நாடு, மத்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மாதம் ஒரு தாய்மொழி அழிவதாகவும், அதனை தடுக்க இந்த தினம் இங்கும் கடைபிடிக்கப்படுகிறது.
மொழிகள் முக்கியம் என மைய கருத்துடன் சர்வதேச தாய்மொழி தினத்தின் வெள்ளி விழா என்பதால் இந்த ஆண்டு அதையும் முன்னிலைப்படுத்தி கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.