இன்று உலக தடகள விளையாட்டு தினம்!
உலகம் முழுவதும் விளையாட்டு பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் மே 7 ஆம் தேதி உலக தடகள தினம் கொண்டாடப்படுகிறது.
உலக அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் முக்கியமானது தடகளம்.
இது ஓட்டம், நடைபயிற்சி, குதிப்பது, ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உட்பட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது.
பள்ளி, கல்லுாரிகளில் தடகள விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள், இளைஞர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சர்வதேச தடகள கூட்டமைப்பு 1996ல் இத்தினத்தை உருவாக்கியது.
இளைஞர்கள் உடல்நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.