வீட்டில் அழகிய ரோஜா தோட்டம் அமைக்க இதோ சில டிப்ஸ்
குளிர்கால மாதங்களில், குறிப்பாக செப்., இறுதியில் இருந்து அக்., வரை ரோஜா செடிகளை நடவு செய்வது சிறந்ததாகும்.
ரோஜா பூக்கள் ஆரோக்கியமாக இருக்க, தினமும் குறைந்தப்பட்சமாக 4 மணி நேரமாவது சூரிய ஒளி கிடைக்க வேண்டும்.
நர்சரிகளில் இருந்து ஆரோக்கியமான ரோஜா செடிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது வீட்டிலேயே செடிகள் இருந்தால், அவற்றிலிருந்தும் வெட்டி வளர்க்கலாம்.
தண்ணீரை தக்க வைக்கும் வகையில் மணலை சேர்க்க வேண்டும். இதனுடன் எரு, காய்ந்த இலைகள் போன்றவற்றையும் சேர்க்கலாம்.
குறைந்த பட்சமாக இரண்டு செடிகளாவது நட வேண்டும். செடிகளுக்கு இடையே போதிய இடைவெளி இருந்தால் தான், கிளைகள் பரவி வளர இடையூறு இருக்காது.
ரோஜா செடிகளில் வேர் அழுகல் என்பது சாதாரணமானது என்பதால், தண்ணீர் தேங்கக்கூடாது. எனவே, மண்ணின் ஈரப்பதத்தை சரிபார்த்து தண்ணீர் விடவும்.
குளிர்காலங்களில், மழைக்காலங்களைப் போல அதிகம் தண்ணீர் தேவை இருக்காது என்பதால், சீரான இடைவெளியில் (2 நாட்களுக்கு ஒருமுறை) செடிகளுக்குத் தண்ணீர் விட்டால் போதுமானது.
செடிகளின் வேர்ப்பகுதியை வெப்பத்திலிருந்து காக்கும் வகையில் மண்ணை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்; இலைகள், வெட்டப்பட்ட புற்கள், தேங்காய் நாரை வேர்ப்பகுதியை ஒட்டி பரப்பி வைக்கலாம்.
அதிகளவிலான இலை வளர்ச்சியை பார்க்கும் போதெல்லாம் வெட்டி விட வேண்டும்.