உள்ளுணர்வை நம்புங்கள்... பில் கேட்ஸின் தன்னம்பிக்கையூட்டும் வரிகள்!
நீங்கள் ஏழையாகப் பிறந்தால் அது உங்களின் தவறு அல்ல.. ஆனால்... ஏழையாக இறந்தால் அது உங்களின் தவறு.
கடினமான வேலையைச் செய்ய நான் ஒரு சோம்பேறியைத் தேர்வு செய்கிறேன். ஏனெனில் சோம்பேறி அதைச் செய்ய ஒரு எளிதான வழியைக் கண்டுபிடிப்பார்.
நான் என்னைத் தவிர வேறு யாருடனும் போட்டியிடவில்லை. தொடர்ந்து என்னை மேம்படுத்துவதே எனது குறிக்கோள்.
பணம் உள்ளபோது, நீங்கள் யார் என்பதை நீங்கள் மட்டுமே மறப்பீர். ஆனால் உங்களிடம் பணம் இல்லாதபோது, நீங்கள் யார் என இந்த முழு உலகமும் மறந்துவிடுகிறது. இதுதான் வாழ்க்கை.
சும்மா இருக்கும்போது கடிகாரத்தைப் பாருங்கள். ஆனால் வேலை செய்யும் போது ஒருபோதும் கடிகாரத்தைப் பார்க்காதீர்கள்.
நீங்கள்
பணம் சம்பாதிக்கலாம் மற்றும் சாக்குப்போக்குகளை உருவாக்கலாம், ஆனால்
சாக்குப்போக்கிலிருந்து எப்போதும் பணம் சம்பாதிக்க முடியாது.
நான் கடினமாக உழைக்கிறேன்; ஏனெனில் என் வேலையை நேசிக்கின்றேன்.
வெற்றியைக் கொண்டாடுவது நல்லது, ஆனால் தோல்வியின் படிப்பினைகளுக்கு செவிசாய்ப்பது மிக முக்கியமானது.
நீங்கள் பெரும்பாலும் உங்களின் உள்ளுணர்வை நம்புங்கள்.