கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கி வரும் உலக நாடுகள்...
ஜெர்மனியில் கஞ்சா செடியை வீட்டிலேயே வளர்ப்பதற்கும், கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கும் மசோதா பார்லியில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி வீட்டிலேயே மூன்று கஞ்சா செடிகளை வளர்க்கலாம். தனிநபர் 25 கிராம் அளவுக்கும் வீட்டில் 50 கிராம் அளவுக்கும் கஞ்சாவை வைத்துக் கொள்ளலாம்.
மேலும் ஏப்ரல் 1 முதல் இது அமலாகவுள்ளது. அரசின் புதிய மசோதாவிற்கு 16 எதிர்க்கட்சிகள் மறு பரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த 2004-ம் ஆண்டு, அமெரிக்கா தனது 29 மாநிலங்களில் கஞ்சாவுக்கான தடையை நீக்கியது.
இதேபோல் நெதர்லாந்து, மால்டா மற்றும் லக்சம்பர்க் போன்ற நாடுகள் கஞ்சாவை சட்டப்பூர்வமாக அண்மையில் அனுமதித்துள்ளன.
மேலும் உருகுவே, ஜார்ஜியா, கனடா, மெக்சிகோ, தாய்லாந்து, போர்ச்சுகல், ஜமைக்கா, ஸ்பெயின், அர்ஜெண்டினா, பெலிஸ் உள்ளிட்ட பல நாடுகள் கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
கஞ்சா மூலம் ஏற்படும் மனநோய் மற்றும் சமூக வன்முறையைக் காரணம் காட்டி 1985-ம் ஆண்டு இந்தியாவும் கஞ்சா பயன்படுத்துவதை எல்லா வடிவத்திலும் முற்றிலுமாக தடைசெய்தது.