இன்று சர்வதேச அருங்காட்சியக தினம்!

அருங்காட்சியகத்தின் (மியூசியம்) முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மே 18ல் உலக அருங்காட்சியக தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பழங்கால தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வரலாற்று பதிவுப் பெட்டகமாகத் திகழக்கூடிய நிறுவனங்களுள் முக்கிய இடத்தைப் பிடித்து நிற்பது அருங்காட்சியகம்

மனித இனத் தோற்றத்தின் தொல் பழங்காலம் முதல் வந்த மனிதனின் பரிணாம வளர்ச்சியையும் காலப்போக்கில் வளர்ந்த பண்பாடு, நாகரிகம், தொழில்கள் குறித்து இதில் இடம்பெறும்.

மேலும் அவை அந்த இனத்தின் சமூகத்தின் அடையாளங்களை நமக்குக் காட்டக் கூடிய ஆதாரங்களே அருங்காட்சியகங்கள் ஆகும்.

மனிதகுல வரலாற்றில் அழிந்தவை போக எஞ்சியவற்றைக் காப்பது ஒவ்வொரு நாட்டின் கடமையாகும்.

ஒரு நாடு மற்றும் சமூகத்தின் மரபுரிமைகளை பேணி பாதுகாத்து இளைய சமுதாயத்தினர், அடுத்தடுத்து வரும் சந்ததியினருக்கு எடுத்து கூற உதவும்.

உலகளவில் கலாசார பரிமாற்றம், மேம்படுத்துதல் அமைதியை ஏற்படுத்துவது இத்தினத்தின் நோக்கமாகும்.