நல்ல எண்ணங்கள் வளரட்டும்... அரவிந்தரின் பொன்மொழிகள்!

சில சமயத்தில் தனி ஒருவரின் வாழ்க்கை, பூமியின் விதியையே நிர்ணயிக்கிறது.

உன்னுடைய நம்பிக்கையை அறிவென்று எண்ணுவது தவறில்லை. ஆனால், பிறர் நம்பிக்கையை மிதிக்காதே.

அமைதி தான் எல்லாமே. அதில் ஞானம், வலிமை, ஆனந்தம் என அனைத்தும் அடங்கியிருக்கின்றன.

மனதில் அமைதி நிலைத்திருந்தால், அகவாழ்விலும், புறவாழ்விலும் சமரசம் நிறைந்திருக்கும்.

யாரையும் ஏளனம் செய்யாதே. உன்னை நீயே உற்று நோக்கினால் உன்னிடமுள்ள மடமையைக் கண்டு சிரிக்க நேரிடும்.

பயனற்ற இன்ப கற்பனைகளில் மூழ்கிக் கிடக்காதே. விழிப்புடன் உலகத்தைப் பார்க்கக் கற்றுக் கொள்.

தீய எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றுங்கள். செய்யும் செயல்களை வேள்வி ஆக்குங்கள்.