இன்று சர்வதேச சுத்தமான காற்று தினம்!
சுத்தமான காற்று தினமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் காற்று மாசுவால் உயிரிழக்கின்றனர்.
இதில் 90% ஏழை, நடுத்தர வருமானம் உடைய நாடுகளை சேர்ந்தவர்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
காற்று மாசுபாடு எவ்வளவு பெரிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அச்சுறுத்தல் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தனிநபர்கள், சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களை காற்று மாசுபாட்டிற்கு எதிராக ஒன்றுசேர்ந்து செயல்படவேண்டியது அவசியம்.
பூமியில் சுத்தமான காற்று கிடைக்க அனைவரும் இணைந்து பாடுபட வலியுறுத்தி செப். 7ல் ஐ.நா., சார்பில் நீல வானத்துக்கான சுத்தமான காற்று தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'காற்றுக்கான பந்தயம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. மேலும் சுத்தமான காற்றை இணைப்பதன் மூலம் அதன் தரத்தை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை விரைவுபடுத்த முடியும் என நம்பப்படுகிறது.