ஆழியை பாதுகாப்போம்... இன்று உலக பெருங்கடல் தினம்

பூமியில் 70 சதவீதம் கடல் தான் உள்ளது. பூமியின் மொத்த ஆக்சிஜனில் 50 சதவீதம் கடல் மூலம் கிடைக்கிறது.

கடல், கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ல் உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப் படுகிறது.

உலகின் சரக்கு போக்குவரத்து கடலில் தான் அதிகம் நடக்கிறது. உலகில் 10 கோடி பேர் தினமும், உணவு, வருமானத்துக்கு கடலை நம்பியே உள்ளனர்.

52 சதவீத மீனவர்களுக்கு கடல் தான் வாழ்க்கை. 20 சதவீதம் பேர் ஓரளவிற்கும், 19 சதவீதம் பேர் மறைமுகமாகவும் கடல் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

சில இடங்களில் கடலில் இருந்து குடிநீர் சுத்திகரிக்கப்படுகிறது. கடலில் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறைகள், பனிப்பாறைகள் ஆகியவையும் கடலில் உள்ளன.

கடலில் கலக்கும் எண்ணெய் கசிவு, தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆகியவை கடலில் கலந்து, அதன் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கின்றன.

பல வழிகளிலும் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை அளிக்கும் ஆழியை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.