இன்று அறிவியலில் பெண்கள், மாணவிகளுக்கான சர்வதேச தினம்
ஒவ்வொரு ஆண்டும் பிப். 11ல் அறிவியலில் பெண்கள், மாணவிகளுக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இத்தினம் ஐக்கிய நாடுகளின் பொது சபையால் அறிவிக்கப்பட்டது.
ஒரு நாடு தனது வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு பாலின சமத்துவமும், அறிவியலும் முக்கியமானவை.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் அதிக பெண்கள் மற்றும் பெண்களை வேலை செய்ய ஊக்குவிப்பதே இதன் நோக்கம்.
'செயற்கை தொழில்நுட்பம், சமூக அறிவியல், நிதியை ஒருங்கிணைத்தல்: பெண்கள், குழுந்தைகளுக்கான ஒருங்கிணைந்த எதிர்காலத்தை உருவாக்குதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
உலகில் அறிவியல் ஆராய்ச்சியில் 33.3 சதவீதம்,அறிவியல் பட்டப்படிப்பில் 35 சதவீதம், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் 22 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் உள்ளனர்.
இது அதிகரிக்கப்பட வேண்டும். மேலும் இந்த துறைகளில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம், நிலையான வளர்ச்சியை 2030-ஆம் ஆண்டிற்குள் அடைய ஐ.நா இலக்கு நிர்ணயித்துள்ளது.