மாணவர்கள் மனநிலையை பாதிக்கும் அலைபேசி அடிக்ஷன்!
தொலைத்தொடர்பு சாதனங்கள் பெருகியிருக்கும் சூழலில் மாணவர்களிடத்தில் தொடர்ந்து 2 முதல் 3 மணி நேரம் அலைபேசி பார்ப்பது அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக 13 வயது முதல் வளர் இளம் பருவத்தினர் பலர் 'அலைபேசி அடிக்ஷன்' பாதிப்பின் ஆரம்ப நிலையில் உள்ளனர் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இப்பாதிப்புள்ளவர்களுக்கு உடல் இயக்கத்திற்கு முக்கியமாக மூளை நரம்பில் சுரக்கும் 'காமா அமினோ பியூட்ரிக் ஆசிட்' தேவையில்லாத நேரத்தில் சுரக்கும், தேவையான நேரத்தில் சுரக்காது.
இதே போல் இரவில் தொடர்ந்து அலைபேசி பார்ப்பதால் துாக்கத்திற்கு மூளையில் சுரக்கும் 'மெலட்டோனின்' சுரப்பது குறைந்து துாக்கமின்மை ஏற்படுமாம்.
இதனால் அதிக கோபம், மன அழுத்தம் அதிகரிக்கும். மறுநாள் பள்ளியில் கூட அவர்கள் மந்த நிலையில் செயல்படுவர். பாடங்களை கவனிப்பதில் தொய்வு ஏற்படும்.
குழந்தகளிடம் பள்ளி விட்டுவந்தவுடன் அலைபேசி அதிகமாக பார்ப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அன்பாக பேசி புரிய வைக்க வேண்டும்.
குழந்தையை வெளிப்புறத்தில் விளையாட அறிவுறுத்தலாம். ஓவியம், நடனம் அல்லது வேறு எந்தச் செயலிலும் குழந்தையை ஈடுபடுத்த ஊக்குவிக்க வேண்டும்.