வியர்வை மேக்-அப்பை கலைக்காமல் இருக்க சில டிப்ஸ்!
வெயில் காலம் வந்தாலே பவுண்டேஷன், மஸ்காரா, ப்ரைமர் போன்ற மேக்கப் சாதனங்களுக்கு பிரச்னை தான், போட்டவுடன் கலைந்துவிடும்.
இதனாலேயே மேக்கப் போடுவதை சிலர் தவிர்க்கின்றனர். மேக்கப்பை வியர்வை பாதிக்காதவாறு எப்படி பாதுக்காக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
சன்ஸ்க்ரீன் : சன்ஸ்க்ரீன் SPF 30 யை உங்கள் மாய்ஸ்சரைசர் மற்றும் மேக்கப் போடுவதற்கு முன்பு பயன்படுத்துங்கள். 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.
மாய்ஸ்சரைஸ் : பின் உங்கள் முகத்தை மாய்ஸ்சரைஸ் செய்வது அவசியம். இதனால் மேக்கப் உங்கள் சருமத்தில் நிலையாக இருக்கும்.
ப்ரைமர் : மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்திய 5 நிமிடங்களுக்குப் பிறகு ப்ரைமரை பயன்படுத்துங்கள். இதை பயன்படுத்திய 5 நிமிடங்களுக்கு பிறகு மேக்-அப்பை போட துவங்கலாம்.
பவுண்டேஷன்: அதன் பிறகு போடப்படும் பவுண்டேஷன் லைட்டானதாக இருப்பது அவசியம். ஹெவியான பவுண்டேஷன் பயன்படுத்தினால் அடிக்கும் வெயிலுக்கு தனியாக தெரியும்.
வாட்டர் ப்ரூப் மஸ்காரா : சந்தையில் கிடைக்கும் வாட்டர்-ப்ரூஃப் மஸ்காராவை பயன்படுத்தலாம். இதேபோல் வாட்டர் ப்ரூப் ஐலைனரையும் உபயோகிக்கலாம்.
இறுதியாக பவுடர் அடிப்படையிலான மேக்கப்பை பயன்படுத்துங்கள். உங்கள் மேக் அப் நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.