சத்தான கீரைகளை வீட்டில் பிரெஷ்ஷாக வளர்க்க இதோ டிப்ஸ்
கீரை விதைகள் மிகவும் சிறிதாக இருப்பதால், நேரடியாக விதைக்கும் போது, தண்ணீர் ஊற்றினால் ஏதாவது ஒரு ஓரமாக சென்றுத் தேங்கிவிடும்.
எனவே, கீரை விதைகளை கொஞ்சம் மண்ணுடன் கலந்து விதைக்க வேண்டும். பின்னர், பூவாளி மூலமாக தண்ணீர் தெளிக்கலாம்.
விதைப்பு, பாசனம் மற்றும் அறுவடை... இவை மூன்றும் கீரை சாகுபடியில் முக்கியமானது. விதைத்து 15 முதல் 20 நாட்களுக்குள் சாகுபடி செய்யலாம்.
அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, சிவப்பு தண்டுக் கீரை, பச்சை தண்டுக் கீரை, பருப்புக் கீரை, காசினி கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி போன்றவற்றை தொட்டியில் வளர்க்கலாம்.
புளிச்சக்கீரை, அகத்திக்கீரை போன்றவற்றைத் தரையில் வளர்க்கலாம்.
முருங்கைக் கீரையை தொட்டி அல்லது தரை என இரண்டு முறையில் வளர்க்கலாம். மாடியில் தொட்டியில் வளர்க்க வேண்டும் என்றால் செடி முருங்கையை வளர்க்கலாம்.
பிளாஸ்டிக் சாக்கில் பாதியளவுக்குத் தென்னை நார்க் கழிவு உரத்தை நிரப்பி, அதில் 10 கிராம் கீரை விதையைத் தூவினால் கூட, 20 நாட்களில் கீரை கிடைக்கும்.
மணத்தக்காளி கீரை நன்றாக படர்ந்து வளரக்கூடியது என்பதால், ஒரு தொட்டியில் ஒரு செடி வைக்கலாம்.
பெரும்பாலான கீரைகளை முழுதாக பிடுங்காமல் தண்டுகளை கிள்ளி எடுத்தாலே போதும்; தொடர்ந்து தழைத்து வளரும்.