இன்று சர்வதேச மலைகள் தினம்
மலை வளம் காக்கவும், மழை வளம் பெறவும், ஐ.நா., சார்பில், டிச., 11ல் 'சர்வதேச மலைகள் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.
சர்வதேச அளவில், பல்லுயிர்க் காடுகளின் அஸ்திவாரமாகவும், வனவிலங்குகளின் வாழ்விடமாகவும் இருப்பவை, மலை பிரதேசங்களே.
உலக நிலப்பரப்பில், 27 சதவீதம் மலைகளே உள்ளன. இதனால் தான், நிலையான பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், மலைகளில் வாழ்கின்றனர். தண்ணீர், உணவு, சுத்தமான காற்று என, அனைத்திற்கும் மலைகளை நம்பியே மக்கள் உள்ளனர்.
மலைகளில் இருந்து தான், 75 சதவீதம் நன்னீர் பெருக்கெடுக்கிறது.
மலைகளில் விளையும் அற்புத மூலிகைகளும், அவை பாதுகாத்து வைத்துள்ள எண்ணற்ற உயிரினங்களும் தான், உணவுச் சங்கிலியில், மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த ஆண்டிற்கான கருப்பொருள் 'மலைகள் மற்றும் அதற்கு அப்பால் உள்ள நீர், உணவு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு பனிப்பாறைகள் முக்கியம்' என்பதாகும்.