இன்று தேசிய கணித தினம்!

உலகின் மிகச்சிறந்த 'கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜம். இவரது பிறந்த தினம் டிச., 22 ஆகும்.

இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினம் 'தேசிய கணித தினமாக' 2011ல் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

வாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். இதுதவிர அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானதாக விளங்குகிறது.

கணித வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்கு மகத்தானது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான். ஆரியபட்டாவுக்கு பின், ராமானுஜன் மூலம் கணிதத்தில் ஆதிக்கத்தை தொடர்ந்தது.

ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு.

அவரை நினைவு கூறும் விதமாக கணிதக் கல்வியை எல்லோரிடமும் சேர்க்கவும், குழந்தைகளிடம் கணிதம் என்றாலே கசப்பு என்ற எண்ணத்தை மாற்றவும் நாம் உறுதி எடுக்க வேண்டும்.