சென்னையிலும் இருக்கு அழகிய தீவுகள்!

சென்னையில் இருந்து 50 கி.மீ., தொலைவில் பழவேற்காடு ஏரியின் நடுவே இருக்கம் தீவு அமைந்துள்ளது.பழவேற்காடு ஏரியிலிருந்து போட்டிங் மூலம் இந்த தீவை அடையலாம்.

சென்னையில் உள்ள அடையாறு ஆற்றில் க்விபிள் தீவு அமைந்துள்ளது.இந்த தீவின் நடுவே ஐரோப்பியர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு கல்லறை உள்ளது.

சென்னையில் இருந்து 70 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள ஆலம்பாறை பழங்கால கோட்டை கடற்கரையும் வங்காள விரிகுடாவும் ஒன்று சேரும் இடத்தில் ஆலம்பாறை தீவு உருவாகியுள்ளது.

ஒரு நாள் பிக்னிக் ஆக சென்னையில் இருந்து ஈ..சி.ஆர் சாலையில் புறப்பட்டால், இந்த வரலாற்று நினைவுச்சின்னத்தை சுற்றி பார்ப்பதோடு சிறு சிறு தீவுகளிலும் விளையாடி மகிழலாம்.

சென்னை அடையாறு ஆற்றங்கரையில் உடைந்த பாலத்துக்கு அருகே திமிங்கல தீவு அமைந்துள்ளது.

ஆற்றில் தண்ணீர் மட்டம் நன்றாக இருக்கும் போதெல்லாம், போட் கிளப்பின் சார்பில் இங்கு போட்டிங் ஏற்பாடு செய்யப்படுகிறது.