இன்று சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் !
உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. உடல் பருமனால் ஆண்டிற்கு 3 மில்லியன் மக்கள் உயிரிழப்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நவ. 26ஆம் தேதியன்று பல நாடுகளில் சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மாறிவரும் வாழ்க்கை முறைதான் காரணமாக ஒபிசிட்டி எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத் தகவல்கள் எச்சரிக்கிறது.
மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் , கல்லீரல், சிறுநீரகம் சம்பந்தமான நோய்களுக்கும் சில கேன்சர் பாதிப்புகளுக்கும் மூலகாரணம் அதிக உடல் எடை.
இந்தியாவில் 21 சதவீத பெண்களும், 19 சதவீத ஆண்களும் அதிக உடல் எடை கொண்டவர்களாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
உடல் பருமனை தடுக்க, வரும் முன் காப்பது அவசியம். குழந்தைப் பருவத்திலேயே உடல் பருமன் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
சிறு வயதிலேயே, உடல் பருமனை தடுக்க, குழந்தைகள் அலைபேசி, தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றில், அதிக நேரம் செலவிட அல்லது விளையாட விடக்கூடாது; ஓடியாடி விளையாட அனுமதிக்க வேண்டும்.
உடல் பருமன் ஏற்பட்டு விட்டால், உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம், எடையைக் குறைக்க வேண்டும்.