சரித்திரம் படைத்த சுனிதா.. இனி அடுத்து என்னென்ன மருத்துவ பரிசோதனைகள்?
விண்வெளியிலுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் பூமிக்கு திரும்பினர்.
9 மாதங்கள் கழித்து பூமியில் கால் வைத்துள்ள சுனிதா வில்லியம்சின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்கட்டமாக, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக நடத்தப்படும். விண்வெளியில் இருந்து திரும்பியவர்களுக்கு பூமியில் நிமிர்ந்து நிற்கும் போது தலைசுற்றல், மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எடை இழப்பு, கண் பார்வை, தோல் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், முழு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
அதற்காக அவர்களுக்கு 45 நாட்கள் நாசா மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும். உடலும், மனமும் புத்துணர்வு பெற இச்சிகிச்சை உதவும்; சுனிதா வில்லியம்சுக்கும் இது பொருந்தும்.
மருத்துவக் கண்காணிப்புக்கு பின், விண்வெளி பயணம், சந்தித்த சவால்கள் குறித்து விண்வெளி மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பர். பின்னரே தங்கள் குடும்பத்தினருடன் இணைவார்கள்.