பார்க்க வேண்டிய கோவில்... சுப்பிரமணிய சுவாமி கோவில், திருச்செந்தூர் !
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது இரண்டாவது படைவீடாகும்.
பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ள நிலையில், இத்தலம் மட்டும் கடற்கரையில் அமைந்துள்ளது.
அதேவேளையில், இதுவும் மலைக்கோயிலே ஆகும். இங்குள்ள கடற்கரை, சந்தன மலையில் அமைந்துள்ளது.
காலப்போக்கில் இக்குன்று மறைந்துவிட்டாலும், வள்ளி குகைக்கு அருகில் சிறு குன்று போல புடைப்பாக இருப்பதை பார்க்கலாம்.
ஆவணி, மாசி மாத திருவிழாவின் போது இங்குள்ள முருகன் மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.
மூலஸ்தானத்தின் பீடத்தை விட மேற்கு திசை கோபுர வாசல் உயரமாக இருப்பதால் நடை அடைக்கப்பட்டே இருக்கும். கந்தசஷ்டி விழா திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒருநாள் மட்டுமே வாசல் திறக்கப்படும்.
இங்குள்ள நாழிக்கிணறு ஒரு சதுர அடி பரப்பும், ஏழு அடி ஆழமும் கொண்டது. குறையாத நீர் சுரக்கும் இயல்புடையது. செந்திலாண்டவனை தரிசிக்கும் முன்பு இதில் நீராடி, பின்னர் கடலில் நீராட வேண்டும் என்பர்.