இன்று இந்திய கொடி நாள்
இந்தியாவை பாதுகாக்கும் நம் முப்படையினர், முன்னாள் வீரர்கள் நலனுக்கு நிதி திரட்டும் வகையில் டிச., 7ல் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது.
நாட்டுக்காக வீர மரணமடைந்த வீரர்கள் குடும்பங்கள், காயமடைந்த வீரர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
மேலும் இத்தினம் நாட்டின் பாதுகாப்புக்காகப் போராடும் முப்படை வீரர்களின் தியாகத்தையும், பங்களிப்பையும் போற்றும் நாளாகும்.
1949 முதல் இந்த கொடி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன்படி, மக்களிடமிருந்து பணம் பெற்று, படைவீரர்கள் நலனுக்காக வழங்கப்படும்.
தற்போது நாட்டிற்காக போரிட்டு உயிரிழந்த வீரர்களுக்கு, அஞ்சலி செலுத்துவதாகவும் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது.