மைசூர் தசரா : பிரமாண்ட தரிசனம்
கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகரில் கொண்டாடப்படும் தசரா பண்டிகையானது உலக புகழ்பெற்றது.
விஜயதசமி நாளில் மைசூரில் சாமுண்டேஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாள் என நம்பப்படுகிறது.
மகிஷாசுரன் என்கிற பெயரிலிருந்து மகிசூர் எனவும், பிற்காலத்தில் மைசூரு என பெயர் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வருடம் இந்த பண்டிகை 422வது ஆண்டு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
தசராவை முன்னிட்டு ஒன்பது நாட்களும் சிறப்பான பூஜைகள் என மைசூரே திருவிழா தேசமாக மாறியிருக்கும்.
பாரம்பரிய நாட்டிய நிகழ்ச்சிகள், மல்யுத்தப்போட்டி, பட்டம் விடும் திருவிழா என பல கேளிக்கை நிறைந்த நிகழ்வுகள் சுற்றுலா பயணியரை கவரும் விதத்தில் நடக்கும்.
750 கிலோ எடையுள்ள சாமுண்டேஸ்வரி தேவியின் சிலையானது பெரிய தங்க அம்பாரியில் வைக்கப்படுகிறது, அதை பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட யானை சுமந்து வரும்.
மைசூர் அரச குடும்பத்திற்கு சொந்தமான 'தங்க அரியணை' இந்த விழாவின்பொழுது மட்டுமே பொதுமக்களுக்காக காட்சிக்கு வைக்கப்படும்.
தசரா திருவிழாவின் மற்றுமொரு சிறப்பு அம்சமாக அரண்மனையானது சுமார் ஒரு லட்சம் விளக்குகளால் ஒளிரும்.
அரசுப்படைகளின் அணிவகுப்பு, அரசின் பெருமைகளைச் சொல்லும் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.