மாதவிடாய் நாட்களில் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யலாம்?

மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி செய்வதால், எண்டோர்பின்கள் மனநிலையை மேம்படுத்தி, உங்களை உற்சாகமாக உணர வைக்கும்.

இது மாதவிடாயுடன் தொடர்புடைய தலைவலி, வயிற்று வலி அல்லது முதுகுவலி போன்றவற்றை குறைக்கும். இதுபோன்ற சூழலில் மேற்கொள்ள வேண்டிய எளிய உடற்பயிற்சிகள் இதோ...

நடைபயிற்சி மாதவிடாய் காலத்தில் செய்யக்கூடிய சிறந்த உடற்பயிற்சியாகும். இது, நுரையீரல் செயல்பாடு, மனநிலையை மேம்படுத்துவதுடன், கலோரிகளை எரிக்கும். எண்டோர்பின் சுரப்பை அதிகரிக்க செய்யும்.

மாதவிடாயின் பிற்பகுதியில் அல்லது இலேசான பிடிப்புகள் இருக்கும் போது மெதுவாக ஜாக்கிங் செய்யலாம். இது, உங்களின் வலி, எரிச்சலை உடனடியாக குறைக்கும், நீரேற்றமாக வைத்திருக்கும்.

யோகா, சுவாச பயிற்சிகள் எரிச்சலூட்டும் மனநிலையை தளர்த்தும். மனதையும், உடலையும் ஓய்வெடுக்க செய்யும். பிடிப்பு, வீக்கம் போன்ற மாதவிடாய் அறிகுறிகளை நீக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மாதவிடாய் காலத்தில் எளிமையான பயிற்சிகளில் ஒன்று நீச்சல். குளிர்ச்சியான நீரில் இருக்கும்போது ரத்த நாளங்கள் இறுக்கப்படுவதால் ரத்தப்போக்கு குறையுமென்பது நிபுணர்களின் கருத்தாகும்.

பிரபலமான உடற்பயிற்சியான பைலேட்ஸ் உடலை அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

லைட் லிஃப்டிங்... நடைப்பயிற்சி அல்லது ஜிம்முக்கு செல்ல முடியாவிட்டால் வீட்டிலேயே மிக எளிதான எடை பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மிதமான உங்களை பாதிக்காத அளவு செய்தாலே வலிமை கூடும்.

நடனமாடுவது உங்களின் மனநிலையை மேம்படுத்தும். இது கூடுதல் கலோரிகளை எரிக்கக்கூடிய செயல். எனவே, பிடித்த இசையை கேட்டு உற்சாகமாக நடனமாடலாம்.

நீட்டுதல் (Stretching)... மாதவிடாய் நாட்களில் படுக்கையில் இருப்பதை விட எளிய பயிற்சிகள் நன்மை தரும். எனவே, உடல் தசைகளை தளர்த்த நீட்சி மற்றும் ஆழ்ந்த மூச்சை எடுக்க முயற்சிக்கலாம்.