வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி எவ்வாறு நடக்கும்?
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை, இன்று முதல் வழங்குவர்.
கணக்கெடுப்பின்போது, புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோருபவர்களுக்கு, படிவம் 6 மற்றும் அதற்கான உறுதிமொழி படிவத்தையும், ஓட்டுச் சாவடி அலுவலர்கள் வழங்குவர்.
கணக்கெடுப்பு படிவம் தவிர, வேறு எந்த ஆவணங்களும் கணக்கெடுப்பு காலத்தில் சமர்ப்பிக்க தேவையில்லை.
கணக்கெடுப்பு படிவத்தில் வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண், முகவரி ஆகியவை முன்பே அச்சிடப்பட்டு இருக்கும்.
புதிய புகைப்படத்தை ஒட்டுவதற்கும் இடம் விடப்பட்டு இருக்கும். அனைத்து வாக்காளர்களும் தங்களது சமீபத்திய கலர் போட்டோவை ஒட்ட வேண்டும்.
இதை தொடர்ந்து, படிவத்தில் தங்களது பிறந்த தேதி, ஆதார் எண் உள்ளிட்ட, கடந்த 2002 - 2004ம் ஆண்டு நடந்த சிறப்பு திருத்த பணியின்போது இருந்த விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கு, படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவத்தை நிரப்ப வேண்டும்.
அதே சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்காளராக இருந்தால், நீக்கம் செய்வதற்கு படிவம் 7 நிரப்ப வேண்டும்.
திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பாக, படிவம் 8 பூர்த்தி செய்ய வேண்டும்.