பாரப்பா... பழநியப்பா.. இன்று தைப்பூசம் !
பழநியில் கடந்த ஜன., 29 அன்று கோலாகலமாக தைப்பூசத் திருவிழா துவங்கியது.
தினமும் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி ஆகியோர் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கின்றனர்.
நேற்று (பிப்.3ல்) இரவு 7:36 மணிக்கு வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி ஆகியோருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
இன்று மாலை 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. ரத வீதிகளில் திருத்தேரோட்டம் வலம் வருகிறது. பிப்.,7ம் தேதி மாலை 7:00 மணிக்கு தெப்பத் தேர் திருவிழா நடக்கவுள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக வெளி மாவட்ட பக்தர்கள் அதிகளவில் பழநியில் குவிந்து வருகின்றனர்.