வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்க சில டிப்ஸ்

கூந்தலுக்கு கலர் பூசுதல், ரசாயன சிகிச்சை செய்வதால் அவை வறண்டு போகச் செய்வதுடன் பலவீனமாகும்.

கற்றாழை ஜெல் மூலமாக வறண்ட கூந்தலைச் சரி செய்யலாம்.

இரவில் ஊறவைத்த ஒரு கப் வெந்தயத்தை காலையில் மைபோல் அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் வறட்சி நீங்கும்

கூந்தலில் ஆலிவ் எண்ணெய் தடவி நன்றாக ஊறவைத்து தலைக்கு குளிக்கலாம்.

வெண்ணெய்யை வறண்ட கூந்தலில் தடவி அரை மணி நேரம் ஊற விட்டு ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம்.

ஒரு டம்ளர் பாலில், ஒரு முட்டையை நுரை வரும்வரை நன்கு அடித்து, அதனை தலையில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து அலச, கூந்தல் மிருதுவாகும்.

தேங்காய்ப்பாலை கூந்தலில் தேய்த்து, ஒரு மணிநேரம் ஊறவைத்து பின் அலச கூந்தல் வறட்சித்தன்மை குறையும்.