வயதான தோற்றத்தை தரும் உணர்வுகள்

சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தான், இளம் வயதிலேயே அதிக வயதானது போல தோற்றம் கொடுக்கும். இதய நோய்கள் வரும் என்பதில்லை.

நம்பிக்கையின்மை, தனிமையான உணர்வு, மகிழ்ச்சியின்மை, விரக்தி போன்ற உணர்வுகள் இருந்தால் கூட, வயதான தோற்றம் உண்டாகக்கூடும்.

இவை சிகரெட் பழக்கத்தை விடவும் அதிகமாக வயதிற்கு மீறிய முதிர்ச்சியுடன் தோற்றம் தரும்.

இறுக்கமான மன நிலையில் இருக்கும்போது புன்னகைத்து பாருங்கள். மனம் இலகுவாகும்.

எதிர்மறை எண்ணங்களை மனதுக்குள் தேக்கி வைப்பது உடலுக்கு மட்டுமல்ல சருமத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

நீண்ட காலத்திற்கு எதிர்மறை உணர்வுகளை சுமப்பவர்கள், விரைவில் வயதான தோற்றத்தை பெற்றுவிடுவார்கள் என்பது சரும நிபுணர்களின் கருத்தாகும்.

மன அழுத்தம் நீண்ட நாட்களாக இருந்தால் புதிய செல்கள் உருவாவதில் குறைபாடு ஏற்பட்டு, விரைவில் வயதான தோற்றம் தொற்றிக்கொள்ளும்.

அடிக்கடி கோபப்படும் போது, கார்டிசோல் ஹார்மோன் வேகமாக உற்பத்தியாகும். இது கொலாஜனின் உற்பத்தியை தடுப்பதால், விரைவாக சருமத்தில் சுருக்கம் தென்பட வழிவகுக்கும்.