கூந்தல் வளர்ச்சியை தூண்டும் ஸ்பிரே... ஈஸியாக செய்யலாம் !

கிராம்பு, வெந்தயம், ரோஸ்மேரி, பட்டை பவுடர் மற்றும் முருங்கை பவுடர் ஆகியவற்றை தலா ஒரு டேபிள் டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.

இவற்றை ஒரு பாட்டில் அல்லது பவுலில் எடுத்துக்கொண்டு ஒரு டம்ளர் சுடுதண்ணீர் ஊற்றி, நன்றாக மூடி 24 மணி நேரத்துக்கு ஊற வைக்கவும்.

மறுநாள் இவற்றை நன்றாக கலக்கிவிட்டு, தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இப்போது கூந்தல் வளர்ச்சிக்கான ஸ்பிரே ரெடி.

தினவும் இரவு தூங்கும் முன்பாக கூந்தல் வேர்க்கால்களில் படுமாறு ஸ்பிரே செய்யலாம்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புரதம் உட்பட பல்வேறு சத்துகள் இவற்றில் நிறைந்துள்ளதால், ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கூந்தலுக்கு பளபளப்பை அளிக்கிறது.

உதிர்வை கட்டுப்படுத்தி, வேர்க்கால்களை வலுப்படுத்துவதன் மூலம் கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.