2023-ன் பாதுகாப்பான இணைய தினம்.
ஆண்டுதோறும் பிப்., இரண்டாம் வாரம் இரண்டாம் நாள் பாதுகாப்பான இணைய தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தன்று, தொழில்நுட்பங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து பல விழிப்புணர்வுகள் கொடுக்கப்படுகின்றன.
மொபைல் போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் விளைவாக, அது சார்ந்த குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
வாட்ஸ்அப் பயனாளர்கள் அதிகமாக இருப்பதால், நடைபெறும் பல குற்ற சம்பவங்கள் அதனை மையப்படுத்தியே நடப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஹேக்கர்கள் இணையத்தில் செயலிகளின் மூலம் லிங்குகளை அனுப்பி, அதனை பயனாளர்களை தொடவைத்து தங்களது வலைக்குள் சிக்க வைக்கின்றனர்.
இணைய மோசடிகளை எவ்வாறு கண்டறிந்து அதிலிருந்து விலகி இருப்பது போன்றவற்றையெல்லாம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.
நம்முடைய தனி விவரங்களையும் சமூக வலைதளக் கணக்குகளையும் வங்கி கணக்குகளையும் எவ்வாறு முடக்கப்படுகிறது என விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இது உலகளாவில் 170 நாடுகளால் இது கொண்டாடப்படுகிறது.