இது ஒரு குத்தமாயா? உலகின் வினோதமான சட்டங்கள்!
உலகில் உள்ள வினோத சட்டங்களை பற்றி தெரிந்துக் கொள்ளுவோம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மென்று சுவைக்கும் சுவிங்கத்தை சிங்கபூர் தடை செய்துள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் சிங்கபூர் தனது நாட்டை தூய்மையாக வைத்து கொள்ள விரும்புவது மட்டுமே.
உலகில் உள்ள அனைத்து கணவன்மார்கள் வாழ்வில் ஒருமுறையாவது சந்திக்கும் பிரச்னை மனைவியின் பிறந்தநாளை மறப்பது. சமோனா என்கிற நாட்டில் மனைவியின் பிறந்தநாளை மறப்பது மிகப்பெரிய குற்றம். இந்த குற்றத்தை செய்து பலரும் சிறைக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மிலன் நாட்டின் சட்டத்தின்படி இங்கு வசிக்கும் மக்கள் எந்நேரமும் முகத்தில் புன்னகையுடன் இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்தவொரு கவலையோ அல்லது சிரமங்கள் இருந்தாலும் சிரித்து கொண்டே இருக்க வேண்டுமாம். இங்கு இரங்கல் வீட்டில் கூட மக்கள் புன்னகையுடனே இருக்கிறார்கள்.
தாய்லாந்தில் எந்தவொரு நபரும் உள்ளாடை அணியாமல் வெளியே சுற்ற முடியாது . உள்ளாடையின்றி நீங்கள் பிடிபட்டால் அதிகபட்சமான அபராதம் விதிக்கப்படுமாம்.
ஒவ்வொரு தாய்-தந்தைக்கும் இருக்கும் ஆசை தான் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைப்பது. ஆனால் டென்மார்க்கில் நீங்கள் இதனை செய்ய இயலாது. அங்கு 'பெர்சனல் பெயர்' என ஒரு சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி அரசு தான் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்.
சுவிட்சர்லாந்து நாட்டில் இரவு 10 மணிக்குமேல் கழிவறையில் ஃபிளஷ் செய்ய முடியாது. இதற்கான காரணம் சுவிட்சர்லாந்து அரசு ஒலி மாசுவை கட்டுப்படுத்த முயன்று வருவதே. இது எந்தளவிற்கு வெற்றிகரமாக இருக்கின்றது என்பது இந்த நாட்டு மக்கள் மற்றும் அரசுக்கு மட்டுமே தெரியும்.
ஆர்கன்சஸ் என்ற நாட்டில் கணவன் மனைவியை வீட்டில் அடிக்கவோ அல்லது தாக்கவோ அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுவும் மாதத்தில் ஒருமுறை மட்டுமே மனைவியை அடிக்க முடியுமாம்.
ஹாங்காங் நாட்டில் இருக்கும் சட்டம் மிகவும் வினோதமானது மட்டுமின்றி கொடூரமானதும் கூட ஏனென்றால் குடும்பத்தில் கணவன் மனைவியை ஏமாற்றுகிறார் என்று தெரிந்தால் கணவனை மனைவி தன் கைகளால் கொல்லலாம்.
ஆஸ்திரேலியாவில் உருளைக்கிழங்கு விளைச்சல் மிகவும் குறைவு இதனால் இதற்கு இங்கு மிகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நாட்டில் குறிப்பிட்ட அளவுக்குமேல் உருளைக்கிழங்குகளை சாலைகளில் எடுத்து செல்ல முடியாது.