இனி உங்களுக்கு வயசே ஆகாது! ஹேர் மஸ்காரா இருக்கிறது!

அனைவருக்கும் எப்போதும் அழகாகவும், இளமையாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பான ஒன்று.

ஆனால், அந்த ஆசைக்குத் தடையாக இருப்பது திடீரென எட்டிப்பார்க்கும் வெள்ளை முடிதான். நரை முடியை மறைக்க, அடிக்கடி 'டை' போடுவது சிரமமான காரியம்.

தலைமுடியின் வேர்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரியும் நரை முடிகளை, மறைக்க இனி கவலைப்படத் தேவையில்லை, இதற்கு 'ஹேர் மஸ்காரா' பயன்படுத்தலாம்.

இது, இமைகளுக்கு பயன்படுத்தும் மஸ்காரா போலவே எளிமையாக செயல்படுகிறது.

இதில் உள்ள பிரத்யேக 'அப்ளிகேட்டர்' முனையை பயன்படுத்தி, நரை முடி உள்ள இடங்களில் மெதுவாக தேய்த்தாலே போதும்; அந்த இடங்கள் கருமையாகிவிடும்.

உங்கள் தலைமுடிக்கு ஒரு புதிய தோற்றத்தைக் கொடுக்க விரும்பினால், இதனைப் பயன்படுத்தி தற்காலிகமாக 'ஹைலைட்ஸ்' மற்றும் 'லோலைட்ஸ்' செய்து கொள்ளலாம்.

பார்ட்டி அல்லது விசேஷங்களுக்குச் செல்லும் போது, கூந்தலுக்கு ஒரு மேக்கப் போல இதனைப் பயன்படுத்தலாம்.

இது கிரேயான் போன்றது அல்ல. மஸ்காரா பிரஷ் போன்ற அமைப்பை கொண்டுள்ளதால், முடியின் வேர்க்கால்களில் துல்லியமாக பூச முடியும்.

இதன் வண்ணம் தற்காலிகமானது என்பதால், தலைக்கு குளிக்கும்போது எளிதில் நீங்கிவிடும். அவசர தேவைகளுக்கும், உடனுக்குடன் அழகை மெருகேற்றவும், இது ஒரு சிறந்த 'ஹேர் மேக்கப்' ஆகும்.