சிறப்பு பயிற்சிகள் குழந்தைகளை விடுமுறையிலும் உற்சாகமாக்கும்!

நீண்ட கோடை விடுமுறை குழந்தைகளை குஷி படுத்தினாலும் பெற்றோர்களின் நிலைதான் சற்று சிரமம். வீட்டிலிருந்து இருந்து கொண்டு டிவி, போன், டேப், என பொழுதை வீணாக்குவார்கள்.

இதனால் அவர்களுக்கு பிடித்த பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பலாம். இதன் மூலம் குழந்தைகளின் அறிவுத் திறன் அதிகரிக்கும், கற்பனை வளரும், மூளையும் சுறுசுறுப்படையும்.

கோடைக்கு நீச்சல் பயிற்சி அவர்களை கூல்லாக்கும் ஒரு சிறந்த தேர்வு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் மேபடுத்தும் சிறந்த பயிற்சி.

ரோபோடிக் பயிற்சி, கோடிங் பயிற்சி போன்ற கணிணி சார்ந்த பயிற்சிகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை. நாளை உலகத்தை உருவாக்கும் எந்திரங்களை, ஆட்டிவிக்கும் தன்மை பள்ளி பருவத்திலேயே கிடைக்கக் கூடும்.

பாட்டு போட்டாலேயே ஆட துவங்கும் குட்டி பிரவு தேவாகளுக்கு, நடனப் பயிற்சி நல்ல நளினத்தை தரும். இனி பள்ளி ஆண்டு விழாவில் அவர்கள் தனிதுவமாக தெரிவார்கள்.

நடனத்தை போல இசை பயிற்சியும், அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தரக்கூடியது. பாட்டு பயிற்சி அல்லது ஏதேனும் ஒரு இசை கருவி பயிற்சி என அவர்களுக்கு பிடித்தவற்றை தேர்வு செய்யலாம்.

ஓவியப் பயிற்சி அவர்களின் கற்பனைத் திறனை மேலும் அதிகரிக்கு செய்யும். மேலும் உலகை வண்ணமயமாக பார்க்க தூண்டும்.

தொடர் தேர்வுகள், கடுமையான பாடங்கள் ஆகியன மனதளவில் அவர்களை பாதித்திருக்கும். அதனால் யோகா பயிற்ச்சி அளிப்பதால் உடல் அளவிலும், மனதளவிலும் அவர்களுக்கு அமைதி, மற்றும் தெளிவை கொடுக்கும்.

சமையல் பயிற்சி தருவது அவர்களுக்கு உணவின் தேவை, பயன், அவசியத்தை உணரவைக்கும். வீட்டிலிருந்தே இப்பயிற்சியை கற்றுத் தரலாம்.