காற்று மாசுபாட்டால் உண்டாகும் மன அழுத்தம்

காற்று மாசடைந்து வருவது மனித சமூகத்துக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. மனிதனின் சராசரி ஆயுள் காலத்தையும் குறைத்து வருகிறது.

உலகம் முழுவதும் தொழில்மயமாதல், நவீனமயமாதல் ஆகியவற்றால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இவை காற்று மாசு ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.

தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் காற்று அசுத்தமடைவது குறிப்பிடத்தக்கது. சுவாச மண்டலத்தில் ஆழமாக ஊடுருவி, கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்தும்.

மன அழுத்தம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் காற்றுமாசு இதில் அதிக பங்கு வகிக்கிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றுமாசு முதலில் செல்களை பாதிக்கிறது. பின் உடலில் வளர்சிதை மாற்றம், அறிவாற்றலை பாதித்து மன அழுத்த பாதிப்பை உருவாக்குகிறது.

நீண்ட காலம் காற்றுமாசு பகுதிகளில் வசிப்போர், குறிப்பாக சல்பர் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடை அதிகளவில் சுவாசித்தவர்கள், மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மக்கள், மன அழுத்த பாதிப்பில் இருந்து விடுபட, காற்றுமாசுவை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.