இன்று சர்வதேச மலேரியா விழிப்புணர்வு தினம்
மலேரியா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.நா சார்பில் ஏப். 25ல் உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனை கட்டுப்படுத்தவும் இதன் நோக்கமாகும்.
'நம்முடன் மலேரியா முடிகிறது : மீண்டும் நிதி வழங்குதல், கற்பனை செய்தல், ஒன்று கூடுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி அனோபிலிஸ் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக்கொள்கிறது. இது ஒருவரை கடிப்பதின் மூலம் மலேரியா பரவுகிறது.
2023ல் 26.30கோடி பேர் பாதிக்கப்பட்டனர். 5.97 லட்சம் பலியாகினர். வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளான அமெரிக்க, ஆசிய, ஆப்பிரிக்காவில் மலேரியா அதிகம் பரவும்.
இதிலிருந்து தப்பிக்க வீட்டின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும். தண்ணீர் தொட்டிகளை எப்போதும் மூடி வைப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.