கனவுத்தோட்டம்... வெற்றிலை செடி வளர்க்க இதோ டிப்ஸ்

வெற்றிலை கொடியில், கணுக்காலில் வேர் விட்டிருக்கும் சிறு கிளையை ஒடித்து வைத்தாலே, முளைத்து விடும்.

நடுவதற்கு இரு முறைகள் உண்டு. ஒரு டம்ளர் நீரில் அதை நிற்க வைத்து அல்லது சாதாரண மண்ணில் செருகி வைத்து வேர் பிடிக்க விட வேண்டும்.

ஒரு வாரத்தில் நீரில் வைத்தது, வேர் விட்டிருக்கும்; மண்ணில் செருகியதும் இலைகள் வர ஆரம்பிக்கும்.

அதை எடுத்து செம்மண், மணல், எரு உரம் சேர்ந்த தொட்டியில் நடவு செய்திடுங்கள்.

தினம் நீர் விட வேண்டிய அவசியம் இல்லை. ஈரப்பதம் இருந்தால் போதுமானது.

வெற்றிலை கொடி வகையை சேர்ந்ததால், கட்டாயமாக அது படர வழி செய்ய வேண்டும்.

நம் வீட்டில் தொட்டியில் வைக்கும்போது ஊடாக புதினா, மல்லி நடவு செய்யலாம்.