குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை வசப்படுத்துவது எப்படி?
வாசிப்பு என்பது குழந்தைகளின் சொற்களஞ்சியம், சரளமாக புரிந்துகொள்ளும் திறன், மொழி, படைப்பாற்றல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
பள்ளி பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விட்டாலே போதும் அவர்கள் வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும்.
படங்கள் அதிகம் உள்ள மற்றும் எழுத்தக்கள் குறைவாக உள்ள புத்தகங்கள் ஏராளமாக கிடைக்கின்றன. அதனால் முதலில் அப்படிபட்ட புத்தகங்களை முதலில் வாங்கி கொடுக்கவும்.
துறு துறு குழந்தைகளுக்கு துப்பறியும் கதைகள், மாயாஜாலக் கதைகள் மற்றும் அட்வென்சர்ஸ் கதைகள் உள்ள புத்தகங்கள் மிகவும் கவரும்.
குழந்தையின் பிறந்தநாள் மற்றும், வெற்றி பெறும்போது பாராட்டும் நோக்குடன், புத்தகங்களையே பரிசாக கொடுங்கள்.
குழந்தைகளை வாரம் ஒரு முறை அல்லது மாதம் இரு முறை நுாலகங்களுக்கு அழைத்துச் சென்று வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு பெட் டைம் கதைகள் சொல்லும் பழக்கத்தை மிக சிறு வயதிலிருந்தே கட்டாயமாக பழக்க வேண்டும். அதனால் புத்தகத்துடன் ஒரு பிணைப்பு இளமையிலேயே வரும்.