இன்று மகாவீரர் ஜெயந்தி...
பசி என்றும் நம்மிடம் வந்தவருக்கு வயிறார சாப்பிடுவதற்கு உணவு அளிப்பதே சிறந்த பண்பாகும்.
கொடுக்கின்ற மனம் மனிதனுக்கு இல்லாவிட்டாலும், பிறர் கொடுப்பதைத் தடுக்க முயல்வது கூடாது.
தவறுக்காக மன்னிப்பு கேட்பதன் மூலம் மனம் துாய்மை பெறும். அச்சம் அகன்று விடும்.
யாரையும் இழிவாக எண்ணுவது கூடாது. கோபத்தில் பழிப்பதும் கூடாது. பொறுமை, கருணை இரண்டும் உங்களின் அணிகலன்களாகட்டும்.
மனிதன் பிறருக்கு உதவி செய்யும் போதும், உபதேசம் செய்யும் போதும் தன்னடக்கத்துடன் எளிமையாக இருக்க வேண்டும்.
இனிய சொல், ஈகை, மனத்துாய்மை இவையே மேன்மக்களின் இயல்புகள்.