இன்று உலக கருணை தினம்!!
மனிதரிடம் கருணை மனப்பான்மையை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நவ., 13 உலக கருணை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்கவிட்டாலும் பல அமைப்புகளால் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது.
முதன் முதலாக ஜப்பானில் டோக்கியோவில் 1998 நவ.13ல் நடந்த மாநாடு ஒன்றில் கருணை மனப்பான்மையை வளர்ப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டது.
அன்றிலிருந்து இந்தியா, பிரேசில், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
சுனாமி, பெரிய புயலில் பலர் உறவு, குடியிருப்புகளை இழந்து தவித்த போது பலரது கருணையால் மறுவாழ்வு பெற்றனர். இன்று கருணை, அன்பு குறைந்ததால் பல நாடுகள் மோதிக்கொண்டுள்ளன.
மனிதர்கள் அன்பை கருணை வடிவில் காண்கின்றனர். கருணையை வளர்த்து கொண்டால் எந்த பிரச்னைக்கும் இடமிருக்காது.
இந்நாளில் எல்லா உயிர்களிடத்தும் கருணை கொள்வோம். அன்புமயமான உலகம் படைப்போம்.