மனச்சோர்வை போக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் ட்ரிக்: நீங்களும் செய்து பாருங்களேன்

இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஏதோ ஒரு இலக்கையோ அல்லது பொருளையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் உத்வேகத்துடன் செயல்பட்டு முடியும் தருணத்தில், நாளை செய்து கொள்ளலாம் என்று சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு தள்ளிப் போட்டுவிடுவர்.

இத்தகைய சோம்பலை முறிக்க என்னதான் தீர்வு? இதற்கு ஜப்பானியர்கள் ஒரு நடைமுறையை பின்பற்றி வருகின்றனர்.

அது தான், கேய்ஸின்(Kaizen) ஜப்பானில் பயன்படுத்தப்படும் ஒரு வகைப் பயிற்சி. இது சோம்பலை நீக்குவதற்கு அவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

வாழ்வில் ஒர் இலக்கு வைத்திருக்கிறோம் அல்லவா. அந்த இலக்கிற்காக அது தொடர்பான ஒரு செயலை நாள்தோறும் ஒரு நிமிடம் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

தினமும் அதே நேரத்தில் தொடர்ந்து செய்து வர நம்முடைய சோம்பல் நீங்கி இலக்கை நோக்கி பயணிக்க முடியும் என்கின்றனர் ஜப்பானியர்கள்.

ஒரு நிமிடம் பழக்கம் வரவர ஒரு நிமிடம் ஒரு மணி நேரமாகலாம்; அது நீண்டு போகலாம்.