இன்று சர்வதேச இளைஞர்கள் தினம்
உலகில் பாதி பேர் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். இது 2030ல் 57% என அதிகரிக்கும்.
குறிப்பாக உலக அளவில் இந்தியாவில் தான் 60 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் உள்ளனர். அதற்கு பிறகு சீனாவில் அதிகமான இளைஞர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்துக்கும் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்.
இதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஆக. 12ல் சர்வதேச இளைஞர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள இளைஞர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இத்தினம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அவர்களின் பிரச்னைகள் மற்றும் சவால்களை உலக அளவில் முன்னிலைப்படுத்த உதவுகிறது.
மேலும் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்கவும் வாய்ப்பளிக்கிறது.