மிரட்டும் புயல்... பாதுகாப்பு வழிமுறைகள் சில…
புயல் சமயம் சூறைக்காற்று அதிகம் வீசும் என்பதால் ஜன்னல்கள், கதவுகளை மூடி வைக்க வேண்டும்.
ஒரு சில நாள்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களான உணவு, நீா் மற்றும் மருந்துகளைக் கையிருப்பில் வைக்க வேண்டும். கயிறு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், கத்தி, குளுகோஸ் அடங்கிய அவசர உதவி பெட்டகம் தயாராக இருக்க வேண்டும்.
பழுதடைந்த கட்டடங்களுக்குள் நுழைய வேண்டாம். மரத்தடியில் வாகனங்களை நிறுத்தவோ, புயல் வீசும் போது வாகனத்தில் பயணிக்கவோ வேண்டாம். புயல் தொடா்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட பின்னரே வாகனத்தில் பயணிக்க வேண்டும்.
ஈரமான கையோடு மின் சாதனங்களை உபயோகிக்க கூடாது.
அறுந்து விழுந்த மின்கம்பிகளின் அருகில் செல்ல கூடாது. மரங்கள், மின்கம்பங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம்.
படகுகளுக்கு இடையே போதுமான இடைவெளி விட்டு, படகுகளை பாதுகாப்பான இடத்தில் மீனவா்கள் நிறுத்தி வைக்க வேண்டும்.
காய்ச்சிய குடிநீரைப் பருக வேண்டும்; சுகாதாரமான உணவை உண்ண வேண்டும்.
விலை உயா்ந்த பொருள்கள் மற்றும் ஆவணங்களை நீா் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
புயல் தொடா்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரபூா்வ அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும்.