இன்று உலக வானளாவிய கட்டட தினம்
உயரமான கட்டடங்கள் தொடர்பான உலக வானளாவிய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது.
ஒரு நாட்டின் பிரமாண்டத்தை காட்டுவதில் வானுயர்ந்த கட்டடங்கள் என அழைக்கப்படும் 'ஸ்கைகிராப்பர்' முக்கிய பங்காற்றுகின்றன.
பழங்காலத்தில் அமைக்கப்பட்ட எகிப்து பிரமிடு முதல் தற்கால வானளாவிய கட்டடங்கள் பிரமிக்க வைக்கின்றன.
'ஸ்கைகிராப்பர்' தந்தை என அழைக்கப்படும் அமெரிக்காவின் லுாயிஸ் சுலிவான் பிறந்த தினமான செப். 3, உலக ஸ்கைகிராப்பர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
கின்னஸ் சாதனை புத்தக தகவலின் படி, உலகின் முதல் ஸ்கைகிராப்பர் கட்டடம் 1885ல் அமெரிக்காவின் சிகாகோவில் அமைக்கப்பட்டது. உயரம் 138 அடி.
தற்போது உலகின் உயரமான கட்டடம் துபாயின் புர்ஜ் கலிபா. உயரம் 2722 அடி. 2010 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்த நாளில் மக்கள் பிரபல வானளாவிய கட்டடங்களில் ஏறி, லிஃப்டில் சென்று, அதன் சிறப்புகளைப் பற்றி அறிந்துகொள்கிறார்கள்.