இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 5000 புகைப்படங்களுடன் போட்டியிட்டு அமெரிக்காவைச் சேர்ந்த பெண் புகைப்பட கலைஞரான ஜெனிபர் ஹட்லி எடுத்த ஒரு சிங்கக்குட்டியின் புகைப்படம் விருதினை தட்டிச் சென்றுள்ளது.
பிரபல புகைப்பட கலைஞர் பால் ஜெனரல் ஹிட்ஸ் மற்றும் டாம் சுல்லம் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு வசூலிக்கப்படும் தொகையில் 10% ஏதேனும் ஒரு நிறுவனத்துடன் நன்கொடையாக சேர்க்கப்படுகிறது.
பால்க்லான்ட் தீவுகளில் மார்ட்டின் கிரேஸ் எடுத்த இந்தப் புகைப்படத்தில், ஒரு கிங் பென்குயின் தனது துணையின் விசித்திரமான புதிய தோற்றத்தைக் கண்டு குழம்பி நிற்கிறது.
பால்க்லான்ட் தீவுகளில் மார்ட்டின் கிரேஸ் எடுத்த இந்தப் புகைப்படத்தில், ஒரு கிங் பென்குயின் தனது துணையின் விசித்திரமான புதிய தோற்றத்தைக் கண்டு குழம்பி நிற்கிறது.
இம்மானுவேல் தென்னாப்பிரிக்காவில் மீர்கட் எனும் பாலைவனக் கீரி விளையாடும் இந்த புகைப்படத்தை எடுத்தார். அய்யோ என்னை விட்டுறா என ஒன்று கெஞ்சுவது போல் உள்ளது.
நெதர்லாந்தில் அலெக்ஸ் பன்சியர் எடுத்த இந்த புகைப்படத்தில் சூப்பர்மேன் போல ஒரு சிவப்பு அணில் மழைத்துளிகளுக்கு இடையே பறக்கிறது.
வாஷிங்டனில் உள்ள கிர்க்லாந்தில் ரியான் சிம்ஸ் எடுத்த இந்தப் புகைப்படத்தில், ஒரு வாத்து குட்டி வரிசைய வரிசையாக அமர்ந்திருக்கும் ஆமை மீது நடந்து தண்ணீர் படாமல் கடக்கிறது.
இந்தாண்டு புகைப்பட திருவிழாவுக்கு கரடி சிரிப்பது; நரி வெட்கப்படுவது, குரங்குகளின் சேட்டை போன்றெல்லாம் நகைச்சுவையை கூட்டும் ஏராளமான புகைப்படங்கள் வந்திருந்தன.