வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது… இன்று உலக தம்பதியர் தினம்!

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 29-ந் தேதி உலகம் முழுவதும் 'உலக தம்பதியர் தினம்' கொண்டாடப்படுகிறது.

தம்பதிகளின் ஒற்றுமைக்கு புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற பண்புகள் முக்கியமானவை. மேலும் திருமண பந்ததை மேம்படுத்த தம்பதியருக்கு சில டிப்ஸ் இதோ…

கடந்த கால தவறுகளை சுட்டிக் காட்ட கூடாது. தேவையின்றி கோபப்படுவதை தவிர்க்க வேண்டும்

பண விஷயத்தில் ஒளிவு மறைவு கூடாது. விட்டு கொடுப்பதில் சமமாக நடக்க வேண்டும்.

திருமணத்திற்கு பின்பும் பள்ளி, கல்லுாரி நண்பர்களுடன் நட்பு தொடரலாம். ஒருவரை ஒருவர் புரிந்து நடக்க வேண்டும்.

தங்கள் லட்சியத்தில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும். விருப்பு, வெறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இருவர் குடும்பத்தினரையும் நிறை, குறையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையை முழுமையான அர்ப்பணிப்போடு வாழ வேண்டும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனம் விட்டு பேச வேண்டும். தவறை ஒப்பு கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். வீண் வாக்குவாதம் தவிர்க்க வேண்டும்.